Tuesday, January 27, 2009

தேன் சிட்டு- ஒரு வலை சுற்றி

தேன்சிட்டு நில்லாமல் பறப்பது. அடுத்து எந்த பூவிற்கு செல்லும் என்று திட்ட வட்டமாக சொல்ல முடியாது. Random movement. அதுவே அதன் அழகும் கூட.

எதற்கு இதைச் சொல்ல வருகிறேன் ?

இணையத்தில் வலைச் சங்கிலிகள் (web ring) உண்டு. அதனைத் தொடர்ந்து சென்றால் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த வலைப்பக்கங்களை அடுத்தடுத்து காணலாம். அது வருகையாளர்களை வலைப் பக்கம் அதிகமாக்கப் பயன் படும். ஓவியம், இசை,ஆன்மீகம் போன்ற பலபிரிவுகளில் இது அதிகம் காணப்படுகிறது.

இந்த தேன் சிட்டைத் தொடர்வதன் மூலம் வாசகரும் பல வலைப்பூக்களை சுற்றி வரலாம் !

இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நான் சொல்ல வருவது ஒரு வலைப் பூ்ந்தோட்டம் (Blog-ring) அமைப்பது பற்றி.

ஒரு தேன்சிட்டு இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் வாசகர்கள் ஒரு வலைப்பூவிலிருந்து அடுத்த பூவிற்கு விருட்டென பறக்க முடியும்.

மாதிரி வார்ப்புரு பக்கத்திலே தரப்பட்டுள்ளது. அதில் Next இணைப்பை சொடுக்குவதன் மூலம் வாசகர் ஒரு வலைப்பூவிலிருந்து அதே பிரிவைச் சேர்ந்த இன்னொரு வலைப்பூவிற்குப் பறக்கலாம்.

இதை வேண்டுமானால் randomized Blog roll என்று வைத்துக்கொள்ளலாம். Blog roll-ல் குறிப்பிட்ட பதிவர் இணைப்பை வெளிப்படுத்தியிருந்தால் மட்டுமே வாசகர் அதை கவனிக்க முடியும். ஆனால் இந்த முறையில் ஒவ்வொருமுறை சொடுக்கும் போதும் வெவ்வேறு வலைப்பூவிற்கு கொண்டு செல்லும். அதனால் அடுத்து செல்லப்போகும் இடுகை என்னவென்று வாசகர் மட்டுமல்ல வலைப்பூ சொந்தக்காரருக்கும் கூடத் தெரியாது.

இதனால் முக்கிய பயன் என்ன ?


1)அடிக்கடி வலைப்பக்கத்தில் புதுப் புது இடுகைகள் இடப்படாமல் -அதனால் திரட்டிகளில் கண்ணில்படாமல்- மறைந்திருக்கும் பல நல்ல வலைப்பூக்களும் வாசகர்களின் பார்வைக்கு வரும். குறைவாக எழுதுபவர்களுக்கு மீண்டும் உற்சாகம் கிடைக்கும். நல்ல நண்பர்குழாமும் வாசகர் வட்டமும் பெருகும்.

2) வலைப்பூக்களுக்கு விஜயம் செய்யும் ஆரம்பகால வாசகர்களுக்கு, திரட்டிகள் பற்றி அறியாதவர்களுக்கு வேண்டிய பிரிவில் வலைப்பூக்களைக் காண இது பெரும் உதவியாக இருக்கும்.


பல வளையங்களில் தங்கள் வலைப்பூவை இணைத்துக் கொள்ள படிவங்கள் side bar-ல் தரப் பட்டுள்ளது.
Site ID க்கு ஆங்கில எழுத்துருவையே உபயோகிக்கவும். அது உங்கள் பதிவையோ அல்லது பெயரையோ குறிப்பதாக இருக்கலாம். கடவுசொல் அதிகம் பயன்படுத்தாததாகவும் எளிமையானதாகவும் இருக்கட்டும். 1234 அல்லது pqrst இப்படி ஏதாவது :))

எல்லாப் பிரிவுகளுக்கும் side-bar ல் புதிய உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ள இணைப்பு உள்ளது. அதன் மூலம் உறுப்பினர் ஆகலாம்.

4 comments:

I AM naagaraa said...

ஆன்மீக வட்டத்தில் இணைவதற்கான படிவத்தின் சுட்டி வேலை செய்யவில்லையே!

தமிழில் பல்சுவைகள் உள்ளடக்கிய உம் வளைய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் கபீரன்பன்!

KABEER ANBAN :கபீரன்பன் said...

நல்வரவு நாகராஜன்,

தங்கள் வலைப்பூவை இணைத்துக் கொள்வதற்கு நன்றி. வாசகர் வட்டம் பெருகட்டும்.

I AM naagaraa said...

site id தவிர தலைப்பு மற்றும் விவரணைக்குத் தமிழை உபயோகிக்கலாமா? தமிழில் தலைப்பு சரியாக வரவில்லையே! ஆங்கிலத்துக்குத் தான் மாற்ற வேண்டுமோ?

KABEER ANBAN :கபீரன்பன் said...

//தமிழில் தலைப்பு சரியாக வரவில்லையே! ஆங்கிலத்துக்குத் தான் மாற்ற வேண்டுமோ? //

alt-wer ring சேவை வழங்குபவர்களின் வலைப்பக்கத்தில் யூனிக்கோடு எழுத்துரு சரியாக காட்டப்படுவதில்லை. அதனால் List இணைப்பின் மூலம் வந்து பட்டியலை பார்ப்பவர்களுக்கு தமிழ் எழுத்துகளை படிக்க முடிவதில்லை. ஆகையால் தங்கள் வலைப்பூ விவரங்களையும் ஆங்கிலத்திலேயே கொடுத்தால் வசதியாக இருக்கும்.
நன்றி