Saturday, February 14, 2009

Pasting Navigation Code-தேன்சிட்டு

The Navigation code is sent as part of the confirmation mail immediately after registration of your site.
There was some hitch due to the incompatibility of widget of Wordpress in accepting the html code which otherwise worked well with the Blogger.

This has been sorted out and hopefully, in future, users may not find any problem. If you find any please bring it to our attention immediately.

The orientation of the logo also has been modified to vertical format so that it may fit well in the sidebar of any Template. What you see in the side bar is the earlier version.
To paste the code you received please follow the procedure given below:



Log in >> Layout>> add a gadget>> Add HTML/Javascript >>paste your code>save.>> drag the gadget to any desired position and SAVE >> view blog, if stisfactory Logout>>Done

In wordpress select "Widgets" >> Text>>paste the code>>done>>Save.

Please ensure that the logo of தேன்சிட்டு appears clearly after you paste the code.
Sample of modified code is given below.














பல்சுவை தேன்

humbird

தேடி வரும் தேன்சிட்டு


JOIN LIST NEXT

alt-webring.com

Friday, January 30, 2009

தேன்சிட்டு -பல்சுவை விருந்து-வளையம்

ஆரம்ப தினமான நேற்று உற்சாகமாகவே இருந்தது. 

உறுப்பினர் எண்ணிக்கை பத்து வலைப்பூக்களைத் தாண்டிவிட்டது. ஆன்மீகத்தில் மட்டும் ஆறு. பிற பிரிவுகளில் இசை விருந்தில் மூன்று, இலக்கிய விருந்தில் இரண்டு. இசை இலக்கிய வளையங்கள் இன்னமும் செயல்படத் துவங்கவில்லை.
அவற்றில் ஏற்பட்ட நிரல்குறியீட்டீல் இருந்த சிறு தவறுகளை சரி செய்தாயிற்று
ஒரு அன்பர் குறிப்பிட்டபடி ஆரம்பத்திலேயே இவ்வளவு பிரிவுகள் தேவைதானா என்ற கேள்வி எழுந்தது.  அதன் காரணம் உறுப்பினர் எண்ணிக்கை அதிகமான பிறகு அவர்களை வகைப்படுத்தி பின்னர் ஒவ்வொரு வலைப்பூவையும் வெவ்வேறு வளையங்களில் இணைப்பது என்பது மிகப் பெரிய வேலையாகிவிடுமோ என்ற கவலையே.
பின்னாளில் ஏற்படக்கூடிய சிரமத்தைத் தவிர்க்கவே பல பிரிவுகள் ஏற்படுத்தப் பட்டன. ஆயினும் அவர் சொன்னதிலும் ஒரு பொருள் இருந்தது. பல அன்பர்கள் தத்தம் வலைப் பூ பிரிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கக் கூடும்.
இக்காரணங்களால் பொதுவான ஒரு பிரிவு ‘பல்சுவை விருந்து’ என்ற பிரிவில்  துவங்கப்பட்டுள்ளது.  இதில் நகைச்சுவை, அனுபவங்கள், அறிவியல், அரசியல், புகைப்படம்,ஓவியம்,சமையல் போன்றவற்றை இணைத்துக் கொள்ளலாம்.
தேவைப்பட்டால் பின்னாளில் உட்பிரிவுகள் பற்றி ஆலோசிக்கலாம் என்று முடிவாகி இருக்கிறது. 
வலைப்பூ ஆசிரியர்கள் யாவரும் இந்த இலவச சேவையை சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Thursday, January 29, 2009

இரண்டு புதிய வளையங்கள்

இலக்கிய விருந்து மற்றும் இசை விருந்துக்கான வளை பக்கங்கள் இப்போது தயார்.

இலக்கிய விருந்து

வருங்காலத்தில் இலக்கியமாகப் போற்றப்படவிருக்கும் கவிதை, கதை மற்றும் திறனாய்வு கட்டுரைகள் படைக்கின்ற அன்பர்களுக்கு இந்த வளையம் ஏற்றது.

இசை விருந்து

திரைப்பட இசை, கர்நாடக ஹிந்துஸ்தானி இசை, நாட்டுப்பாடல்கள் குறித்த கட்டுரைகள், ஒலிகோப்புகள் அடங்கிய வலைப்பூக்களை இதில் சேர்த்திடவும்.

மேலும் பல்சுவை விருந்து, நகை விருந்து, அறிவியல் மற்றும் கலை விருந்து என்ற பெயர்களிலும் வளையங்களை அமைக்க விருப்பம்.

பல்சுவை விருந்தில் அரசியல், மொக்கை, அனுபவங்கள், சுய முன்னேற்றம் போன்றவற்றை இணைக்கவும்,

நகைவிருந்து முழுக்க முழுக்க நகைச்சுவையை பிரதானமாகக் கொண்ட பதிவர்களின் படைப்புகளுக்காகவும்,

கலை விருந்து என்பது புகைப்படக்கலை, ஓவியம், கோலங்கள், சமையல் பற்றிய வலைப்பூக்களுக்காகவும்,

அறிவியலில் விஞ்ஞானம், மருத்துவம், மென்பொருள் தொழில் நுட்பம், இயற்கை சூழல், விவசாயம் அடிப்படையில் வரும் கட்டுரைகள் ஏந்திவரும் வலைப் பூக்களுக்காகவும் வளையங்கள் அமைக்க ஆர்வம் உண்டு.

ஒரே பதிவர் தம் வலைப்பூவில் மேற்கண்ட பலவிதமான வகைகளிலும் எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் என்ன செய்வது ? அவர்கள் பல்சுவை விருந்தில் இணைந்து தத்தம் வலைப்பக்கத்தில் மறக்காமல் குறிசொற்களை (Label cloud) தெரியுமாறு செய்தால் பயனுள்ளதாகும்.

இல்லாவிட்டால் உதிரிப்பூக்கள் என்ற ஒரு புதிய வளையத்தை ஆரம்பிக்க வேண்டியதுதான்!!!! :))

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

பதிவாளர்களின் கவனத்திற்கு

தேன் சிட்டு வளையத்தில் இணைக்க விரும்பும் ஒவ்வொரு வலைப்பூவும் தனித்தனியாக உள்ளீடு செய்யப்படுதல் வேண்டும்.


பட்டியலில் இல்லாத வலைப்பூக்கள் வாசகர் வரவை பெறாது. ஆகையால் ஒரு வலைப்பூவின் வார்ப்புருவை தம்முடைய மற்றொரு வலைப்பூவில் பொருத்துவதால்அதன் மூலம் வளையத்தின் இன்னொரு பூவுக்கு செல்ல முடியுமே தவிர யாரையும் எதிர்பார்க்க முடியாது. 
Site ID ஐ ஆங்கிலத்திலே எளிமையாக வைத்துக் கொள்ளவும். உதாரணமாக ஒருவரின் வலைப்பூ கூட்டாஞ்சோறு என்று வைத்துக்கொள்வோம்.
அவர் அதை koottaamsoru என்றோ kootusoru  என்றோ வைத்து கொள்வது நல்லது. இதனால் site Admin மற்றும் Ring Admin எளிதாகிறது. சேவை தரும் alt-webring ஏனோ யூனிகோட் எழுத்துருவை ஆதரிக்கவில்லை.
கடவு சொற்களை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.

இந்த வலைப் பக்கத்தை கூகிள் ரீடர், ப்ளாக் லைன்ஸ் போன்ற திரட்டிகளில் சேமித்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் அவ்வப்போது வெளிவரும் முன்னேற்றங்களை அறியவும் தங்கள் Alt-web வலைப்பக்கத்தை சிரமமின்றி அணுகவும் பயன்படும்.

Tuesday, January 27, 2009

தேன் சிட்டு- ஒரு வலை சுற்றி

தேன்சிட்டு நில்லாமல் பறப்பது. அடுத்து எந்த பூவிற்கு செல்லும் என்று திட்ட வட்டமாக சொல்ல முடியாது. Random movement. அதுவே அதன் அழகும் கூட.

எதற்கு இதைச் சொல்ல வருகிறேன் ?

இணையத்தில் வலைச் சங்கிலிகள் (web ring) உண்டு. அதனைத் தொடர்ந்து சென்றால் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த வலைப்பக்கங்களை அடுத்தடுத்து காணலாம். அது வருகையாளர்களை வலைப் பக்கம் அதிகமாக்கப் பயன் படும். ஓவியம், இசை,ஆன்மீகம் போன்ற பலபிரிவுகளில் இது அதிகம் காணப்படுகிறது.

இந்த தேன் சிட்டைத் தொடர்வதன் மூலம் வாசகரும் பல வலைப்பூக்களை சுற்றி வரலாம் !

இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நான் சொல்ல வருவது ஒரு வலைப் பூ்ந்தோட்டம் (Blog-ring) அமைப்பது பற்றி.

ஒரு தேன்சிட்டு இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் வாசகர்கள் ஒரு வலைப்பூவிலிருந்து அடுத்த பூவிற்கு விருட்டென பறக்க முடியும்.

மாதிரி வார்ப்புரு பக்கத்திலே தரப்பட்டுள்ளது. அதில் Next இணைப்பை சொடுக்குவதன் மூலம் வாசகர் ஒரு வலைப்பூவிலிருந்து அதே பிரிவைச் சேர்ந்த இன்னொரு வலைப்பூவிற்குப் பறக்கலாம்.

இதை வேண்டுமானால் randomized Blog roll என்று வைத்துக்கொள்ளலாம். Blog roll-ல் குறிப்பிட்ட பதிவர் இணைப்பை வெளிப்படுத்தியிருந்தால் மட்டுமே வாசகர் அதை கவனிக்க முடியும். ஆனால் இந்த முறையில் ஒவ்வொருமுறை சொடுக்கும் போதும் வெவ்வேறு வலைப்பூவிற்கு கொண்டு செல்லும். அதனால் அடுத்து செல்லப்போகும் இடுகை என்னவென்று வாசகர் மட்டுமல்ல வலைப்பூ சொந்தக்காரருக்கும் கூடத் தெரியாது.

இதனால் முக்கிய பயன் என்ன ?


1)அடிக்கடி வலைப்பக்கத்தில் புதுப் புது இடுகைகள் இடப்படாமல் -அதனால் திரட்டிகளில் கண்ணில்படாமல்- மறைந்திருக்கும் பல நல்ல வலைப்பூக்களும் வாசகர்களின் பார்வைக்கு வரும். குறைவாக எழுதுபவர்களுக்கு மீண்டும் உற்சாகம் கிடைக்கும். நல்ல நண்பர்குழாமும் வாசகர் வட்டமும் பெருகும்.

2) வலைப்பூக்களுக்கு விஜயம் செய்யும் ஆரம்பகால வாசகர்களுக்கு, திரட்டிகள் பற்றி அறியாதவர்களுக்கு வேண்டிய பிரிவில் வலைப்பூக்களைக் காண இது பெரும் உதவியாக இருக்கும்.


பல வளையங்களில் தங்கள் வலைப்பூவை இணைத்துக் கொள்ள படிவங்கள் side bar-ல் தரப் பட்டுள்ளது.
Site ID க்கு ஆங்கில எழுத்துருவையே உபயோகிக்கவும். அது உங்கள் பதிவையோ அல்லது பெயரையோ குறிப்பதாக இருக்கலாம். கடவுசொல் அதிகம் பயன்படுத்தாததாகவும் எளிமையானதாகவும் இருக்கட்டும். 1234 அல்லது pqrst இப்படி ஏதாவது :))

எல்லாப் பிரிவுகளுக்கும் side-bar ல் புதிய உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ள இணைப்பு உள்ளது. அதன் மூலம் உறுப்பினர் ஆகலாம்.